Sunday, March 16, 2008

சித்திரக்கவி - இரட்டை நாகபந்தம்

இது சித்திரக்கவியின் வகைகள் பலவற்றுள் ஒன்று. மேலும், அட்டநாகபந்தம்,இரதபந்தம், முரசபந்தம் என பந்த கவிகள் பல வகை உண்டு.
இரட்டை நாக பந்தத்தில் , நேரிசைசிந்தியல் வெண்பா மற்றும் இன்னிசை சிந்தியல் வெண்பா கொண்டு வடித்துள்ளேன்.

நேரிசை வெண்பா:-
செஞ்சடை நாதனை செம்புலத் தாணுவை
விஞ்சிடவே தாரணியில் ஆகாதே - என்றும்தான்
அஞ்சுகம் கொண்டான் தலை.

விளக்கம்:-
செம்மையான சடையும் செம்மையான நிலத்தினை உடயவனுமாகிய ஈசனை விஞ்சிட இப்புவியில் யாராலும் இயலாது. என்றுமே கிளியை(அங்கயற்கண்ணி) கொண்டவனே சிறந்தவன்

இன்னிசை வெண்பா:-
விண்ணவர் தம்மொடு புண்ணிய மாகிய
நற்செஞ் சுடரே கொடுத்திடா யென்றுநான்
பாடுவேன் நாபியில்தே டாதது.

விளக்கம்:-
விண்ணுலகத்தோர் மிகப் புண்ணியமானது என எண்ணும் சுடரோனே!நாபியாகிய மணிபூரகத்தின் உள்ளே தேட இயலாதவற்கு ஒளி அளித்திடுவாயா?.




14 comments:

Vinu said...

மிக மிக அற்புதம்... தமிழால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்... வாழ்க நின் தமிழ்த் தொண்டு.

Ambasoft said...

மிக்க நன்றி நண்பரே

Amthus Saleema said...

sila nerangalil enakku perumayum(umathu pulamai)athangamum(ennal en mudiyamal poyitru) undu!

பத்மா said...

அருமை அருமை...எங்கள் காலம் வாழ் அருமையான புலவர் நீங்கள்.படிக்க படிக்க ஆச்சரியமாய் உள்ளது.பெரிய வடிவில் நாகம் காண இயலுமா?
பத்மா.....

Ambasoft said...

மிக்க நன்றி நண்பர்களே.
இது ஒரு சாதாரண விஷயம். வெண்பா அறிந்த யார் வேண்டுமானாலும் நாகபந்தம் வடிக்கலாம். வெண்பா இலக்கியமும் மிக எளிமையான ஒன்று.
பெரிய வடிவில் தெளிவாக விரைவில் நாகபந்தம் பதிக்கின்றேன்.

Anand said...

இது ஒரு நல்ல படைப்பு .பொதுவாகக் காணக் கிடைக்காத ஒரு வகைக் கவியை தந்தமைக்கு நன்றி (நான் இணையதளம் பற்றி கூறுகிறேன் ). வேறு சில பந்தங்களும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் .(ரத பந்தம் ,அஷ்ட நாக பந்தம் போன்றவை )

Lakshmi Sahambari said...

உங்கள் புலமை உவகை கொள்ளச் செய்கிறது !

techieV2 said...

அருமையான படைப்பு நண்பரே.. வாழ்த்துக்கள்...

Ambasoft said...

ஆனந்த், லக்ஷ்மி, ஸ்ரீ ராம் மிக்க நன்றி. மேலும் சில பந்தங்களையும் வடிக்க முயல்கிறேன்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

i read ur posts without fail.... keep posting....

Pradeep Chandrasekaran

Ambasoft said...

mikka nandri pradeep

Dr.V.K.Kanniappan said...

அன்புள்ள நண்பர்க்கு,
இரட்டை நாகபந்தம் அமைத்த முயற்சிக்கு வாழ்த்துகள். சிந்தடியாக இருந்தாலும் நற்பொருளுடையதே.

எனக்கு இரண்டு சந்தேகங்கள்:
நேரிசை வெண்பாவில் தனிச்சொல் எதுகை ’ஞ்’ க்குப் ’ன்’ வரலாமா?

இன்னிசை வெண்பாவில் ஈற்றடியில் ’டாததை’ என்பது இலக்கணப்படி சரிதானா?

ஈற்றடி நேரசையாகவோ நிரையசையாகவோ இருக்கவேண்டும். இரண்டாவது அசை வந்தால் அது உகரத்தில் முடிய வேண்டும் என்பது விதி என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

Unknown said...

நாகபந்தமயூரா நமோநம.

Ambasoft said...

திரு கன்னியப்பன்,

தங்கள் சுட்டிக்காட்டுதலுக்கு நன்றிகள் பல. தாங்கள் கூறிய முதல் ஆலோசனை எனக்கு எந்த அடியில் என்று விளங்கவில்லை. இரண்டாவது கூறியதை செயல்படுத்தி சரிசெய்துவிட்டேன்.

நன்றிகள்!